ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்

0
408

சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்ததால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக கல்லாறு- அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரெயில் பாதையில் விழுந்தன.

தண்டவாளங்கள் சேதமடைந்ததால், மலை ரெயில் சேவை கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சீரமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவு பெற்று மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்