கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய பிலிப்பைன்ஸ் பெர்பக்சுவல் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா !

0
176
கொரோனா காலங்களில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள பெர்பெக்சுவல் மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா நோய் குறித்து தாக்கமும் விழிப்புணர்வும் பொதுமக்களிடம்  ஏற்படுத்த வேண்டுமென கல்லூரி சார்பாக அறிவுறுத்தப்பட்டது. 

அதில்  130 க்கும் மேற்பட்டோர் குறும்படங்களை, தாங்களே பேசி தயாரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் ; அவர்களை பாராட்டும் விதமாக திருநெல்வேலியில் இயங்கிவரும் பிராம்ப்ட் கல்வி நிறுவனம், கொரோனா நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிலிப்பைன்ஸ் மாணவர்களுக்கும், மேலும் சில சமூக ஆர்வலர்களுக்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு விழாவை நேற்று திருநெல்வேலி ஸ்ரீராம் ஹோட்டலில் நடத்தியது.

இவ்விழாவில் கொரோனா நோய் தாக்கம் குறித்தும், தடுப்பு குறித்தும், மூன்றாவது அலையின் விளைவுகள், முன்னெச்சரிக்கைகள் குறித்தும், மருத்துவர்கள் காரக்கோணம் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மருத்துவர் புனிதன்(HOD-Department of  Vascular surgery)மற்றும் ஹாரி தாமஸ் ரோடிரிக்ஸ் ஆகியோர் பேசினார்கள்.

இவ்விழாவிற்கு தலைமை விருந்தினராக திரு ராமகிருஷ்ணன் அவர்கள், கலந்து கொண்டு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும், பாராட்டு சான்றுகளையும், நினைவு பரிசு கேடயங்களையும், வழங்கி சிறப்புரையாற்றினாகள்.

மேலும் அவர் கூறும்போது, இந்த நோயின் தாக்கத்தையும், விளைவுகளையும், பிற நாடுகளோடு ஒப்பிடும்போது நம் பாரதப்பிரதமர் மோடிஜி அவர்கள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளான, 'அனைவருக்கும் தடுப்பூசி', மாநில அரசு செய்யவேண்டிய கட்டுப்பாடுகள், பொதுமக்கள் பின்பற்றவேண்டிய சுயகட்டுப்பாடுகள், போன்ற துரித செயல்பாட்டையும் மேற்கோள்காட்டி பாரத பிரதமருக்கு நன்றிகளை உரிதாக்குவதாக பேசினார்கள்.
 
'சமுதாயத்தில் மருத்துவ மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் திருமதி ஆண்டாள் அவர்கள், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  முன்னாள் வட்டாட்ச்சியர்கள் ஓய்வு பெற்ற திரு முத்துசாமி ,துணை ஆட்சியர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

தேர்வுபெற்ற மருத்துவ மாணவர்களுக்கு வட்டாட்ச்சியர் திரு ராமகிருஷ்ணன், மற்றும் திரு ஆண்டாள் அவர்கள் ,சிறப்பு பரிசான ஸ்தடெஸ்கோப் வழங்கி பாராட்டினார்கள்.
முன்னதாக பிராம்ப்ட் கல்விநிறுவன இயக்குனர் டாக்டர் ஆனந்தராஜ் அவர்கள் வரவேற்று பேசினார்கள்.

நிகழ்ச்சிகளை திரு சாமஹெல்மண் தொகுத்து வழங்கினார்; இவ்விழாவில் சமூக ஆர்வலர்கள் அற்புதராஜா, அமல்செல்வபிரசாத் ,ஆசிரியர் பிரேமலதா துரைபாண்டியன், ஆசிரியர்கள் சீனிமைக்கேல், தலைமை மருத்துவ செவிலியர்கள் சுசிலா , லோகேஸ்வரி, மற்றும் சென்னை சானிட்டரி அலுவலர் அப்துல் ஜப்பார் அவர்களுக்கு, கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வு கூறி வெளியிட்டமைக்கு பாராட்டு சான்றும், நினைவு பரிசுகளையும் காரக்கோணம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் மருத்துவர் புனிதன் அவர்கள் வழங்கினார்கள். 

FMGE தேர்வு குறித்தும் பின்னர் மேற்கொள்ளவேண்டிய அலுவலக செயல்பாடுகள் குறித்தும், முனைவர் மாரிமுத்து அவர்கள் பேசினார்கள்.
இந்நிகழ்ச்சிகளை டாக்டர் ஆனந்தராஜ் தலைமையில் ,அலுவலர்கள் ராமலட்சுமி, வித்யாலட்சுமி, கார்த்திகா, சோனியா மேரி அகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

 முடிவில் UPHSD கல்லூரி பேராசிரியர்கள் கருணாகரன் பால் பெர்னாண்டஸ், ராஜேந்திரன் ஆகியோர் நன்றி தெரிவித்து பேசி விழாவினை முடித்துவைத்தார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்