நடிகை மீனாவின் மொத்த குடும்பத்திற்கும் கொரோனா

0
141

நடிகை மீனாவின் மொத்த குடும்பத்திற்கும் கொரோனா பரவல்.
2022-ல் தனது வீட்டிற்கு முதல் பார்வையாளராக கொரோனா வந்திருப்பதாக நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 1990-களில் பிரபலமான கதாநாயகியான வலம் வந்தவர் நடிகை மீனா. திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால், கார்த்திக், பிரபு, விஜயகாந்த் மற்றும் அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை மீனா, தனது குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

‘2022-ல் எனது வீட்டிற்கு வந்த முதல் பார்வையாளர் கொரோனா. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். தயவுசெய்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். பொறுப்பாக இருங்கள். இந்த வைரசை பரவ விடாதீர்கள். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என மீனா கூறி உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்