சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர் கைது

0
372

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் நான்கில் நீதிபதியாக பணி புரிந்து வருபவர் பொன் பாண்டியன். இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள நீதிபதி அறையில் பொன் பாண்டியன் இருந்தபோது அங்கே வந்த நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்பவர் பணி மாறுதல் குறித்து நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் தனது கையில் வைத்திருந்த கத்தியால் நீதிபதியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் நீதிபதி பொன் பாண்டியனின் மார்பு பகுதியில் காயம் காயம் ஏற்பட்டது. இதனால் நீதிபதி கூச்சலிட, அங்கிருந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர் பிரகாஷ்யை பிடித்து அஸ்தம்பட்டி காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காயமடைந்த நீதிபதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மார்பு பகுதியில் தையல் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நீதிபதி குமரகுரு, சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.நீதிபதியை நீதிமன்ற ஊழியர் கத்தியால் குத்திய இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெ . சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்