சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு மக்கள் திண்டாட்டம்.

0
129

ரஷ்யா உக்ரைன் போரின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் உணரப்படுகிறது. இந்தியாவிலும் மக்கள் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து மக்களின் முக்கிய பயன்பாடான சிலிண்டர் எரிவாயுவின் விலை மாதந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கடந்த 2021 ஜனவரி மாதம் 710 ரூபாயாக இருந்த ஒரு சிலிண்டரின் விலை அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல் முதலாக 900 ரூபாய் வரை விலை ஏற்றத்தை கண்டது. அதேபோல கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 917 ரூபாயாக உயர்ந்த சிலிண்டர் விலை மார்ச் 22ஆம் தேதியான இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாயாக உள்ளது .

Diesel price hike makes petrol cheaper in Goa - BusinessToday


அதுபோல கடந்த 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசலின் விலை இன்று உயர்ந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் போரின் தாக்கத்தால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இதனால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 70 காசுகள் உயர்ந்து தற்போது 102.16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல டீசலும் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 92.19 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் நாட்டு மக்களிடையே மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்