தினமும் இயற்கை விவசாய ‌செய்தி (பஞ்ச காவ்யா)

0
161

பஞ்ச காவ்யா

பஞ்சகாவ்யா என்பது பயிர்களுக்கு மேலுரம்
இதை தயாரிக்க ஒன்பது‌
பொருட்கள்‌தேவை.


நாட்டு‌மாடு கலப்பின மாடு என எந்த பொருள்களையும் பயன்படுத்தலாம்
1.சாணம்‌‌3 கிலோ
2.பசு மூத்திரம் 3லிட்டர்
3.பால் 2 லிட்டர்
4.தயிர் 2 லிட்டர்
5.நாட்டு சர்க்கரை 1 கிலோ
அல்லது
கரும்பு சாறு 2, லிட்டர்
6.வாழைப்பழம் 12 எண்ணம்
7.இளநீர் 2 லிட்டர்
8.கள் 2, லிட்டர் அல்லது
ஈஸ்ட் 2 லிட்டர்
9.கடலை பிண்ணாக்கு 1 கிலோ


செய்முறை:-
கடலை பிண்ணாக்கை ஒரு மணிநேரம் நீரில்
ஊறவைத்து பிறகு வாளியில் போட்டு சாணம் சேர்த்து பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக்கி பிளாஸ்டிக் கேனில் போட்டு‌ மூடிவைக்கவும்
தொடர்ந்து மூன்று நாட்கள் சாணம் பிண்ணாக்கு கலவை பீப்பாய்க்குள் இருக்கவேண்டும்.
நான்காவது நாள்
பீப்பாயின் மூடியைத் திறந்து பால் தயிர் இளநீர்
பிசைந்த வாழை பழம்
பசு மாட்டு மூத்திரம் ஆகிய ஐந்து பொருள்களையும் சாணக்கலவையோடு சேர்த்து பிசையவும் ,நாட்டு சர்க்கரையை மூன்று லிட்டர் நீரில்‌கலந்து சர்க்கரை நீராக மாற்றி பீப்பாய்க்குள் ஊற்ற வேண்டும்.

பத்தாவது நாள் வரை காலை மாலை இரு வேளைகளில் தினமும்
கரைசலைக் கலக்க வேண்டும். கலக்கிய பிறகு பீப்பாயை மூடி வைக்கவும். பதினொன்றாம் நாள் கள்ளை‌ பீப்பாய் கற்கும் வரை ஏற்றவேண்டும், தொடர்ந்து ஏழு நாட்கள் கரைசலைக்கலக்கவும்
பத்தொன்பதாவது நாள் பஞ்சகவ்யா தயார்!
இதன் ஆயுள் காலம் ஆறுமாதம்.
வெயில் காலத்தில் இது ஆவியாகி விடும் அப்போது சர்க்கரை நீர் கலக்கவும்.

பஞ்ச காவ்யா பயன்படுத்தும் முறை:-
தெளிப்பு மற்றும் பாசன நீர்வழி உரமாக எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்லாம். ஒரு லிட்டர் நீருக்கு முப்பது மில்லி பஞ்ச காவ்யா சேர்க்க வேண்டும்‌, 15 நாட்களுக்கு ஒருமுறை அதிகாலை அல்லது‌ இளமாலை வேளைகளில் பயிருக்கு தெளிக்க வேண்டும் ; தெளிப்பு உரமாக பயன்படுத்தும் பொழுது இதை நன்கு வடிகட்ட வேண்டும் விதை‌ மற்றும் நாற்று நேர்த்தி செய்யவும் பயன்படுகிறது.

முதலில் சொன்ன அளவில் ஒரு லிட்டர் நீர்
30 மில்லி பஞ்சகாவ்யா என்ற அளவின் விதமோ அல்லது நாற்றுகளை நனைத்து நிழலில் உலர வைத்து நடவோ செய்யவேண்டும். இதனால் முளைப்பு திறன் அதிகரிக்கும். வேர்களின் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும் பஞ்ச காவ்யாவில் மணி சாம்பல் சத்துகள் உள்ளன.இது வளர்ச்சியூக்கியாகவும், நுண்ணூட்ட சத்துகளை
வேர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் அமுதசுரபியாகவும் உள்ளது.

நன்றி
வெள்ளைச்சாமி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்