தினமும் விவசாய செய்தி (ஈ.எம் எனும் திறமி,மீன் அமினோ அமிலம்,வேப்பங்கொட்டை கரைசல்)

0
270

ஈ.எம் என்னும் திறமி தயாரிப்பு முறை:- Enriched micro organism

இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் விரட்டியாகவும் செயல்படுகிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்க தேவைப்படும் பொருள்கள்.
1.பப்பாளி பழம் 1 கிலோ
2.பரங்கி காய்/தடியங்காய்
1 கிலோ
3.வாழைப்பழம் 1கிலோ
4.நாட்டு சர்க்கரை 1 கிலோ
5.முட்டை ‌1
செய்முறை
பழங்களை தோலோடு சேர்த்து சிறிது சிறிதாக
நறுக்கவும். வாய்குறுகலான பிளாஸ்டிக்‌ கேனில் இவற்றை போடவும் முட்டையை உடைத்து
ஓடுகளையும் சேர்த்து‌ இந்த கலவையில் ‌போடவும்.பிறகு இந்த கலவை மூழ்கும் வரை
நீர் சேர்க்கவும். பிறகு காற்று உள்ளே புகாமல்
இருக மூடவும். பதினைந்து நாட்கள் கழித்து திறந்து பார்க்கும் போது கலவையின் மீது வெண்மையான நிறம் பரவியிருந்தால் ஈஎம் நுண்ணியிர்கள் வேகமாக வளர்கின்றது என்று பொருள்.

அப்படி இல்லாவிட்டால் ஒரு கைப்பிடி நாட்டு சர்க்கரை சேர்த்து மூடியை நன்கு
மூடவும். அடுத்த 15ஆம் நாள் அதாவது 30 ஆம் நாள் ஈ எம் தயார். 10 லிட்டர் நீரில் 500 மில்லி
ஈ எம் கலந்து தெளிக்கலாம்.
பலன்கள்
இலைச் சுருட்டு நோய், மஞ்சள் நோய் போன்ற நோய்கள் கட்டுப்படுகின்றனன. பஞ்ச காவ்யா ‌அமுதகரைசல் போலவே இந்த ஈ.எம் திறமி நுண்ணுயிரியும்,வளர்ச்சியூக்கியாகவும்
செயல்படுகிறது. பாசன நீரில் கலந்து விட்டாலே
போதும், ஆறு மாதம் வரை வைத்திருந்து பயன் படுத்தலாம்.

இரண்டாம் முறை ஈ.எம் கரைசல் செய்ய முதலில் தயார் செய்த கரைசலிலிருந்து 1 லிட்டர் ஈ.ம் 18 லிட்டர் நீரில் 1 கிலோ நாட்டு சர்க்கரை கலந்த கரைசல் இந்த மூன்றையும் 7 நாட்கள் மூடி வைத்து பிறகு ‌பயிர்களுக்கு தெளிக்கலாம்.

மீன் அமினோ அமிலம்

மீன் அமினோ அமிலம்
ஒரு கிலோ நாட்டு சர்க்கரை + ஒரு கிலோ மீன்
கழிவுகள் இரண்டையும் ஒரு மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்கவும். 40 நாள் கழித்து ஒரு தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாழிக்குள் இருக்கும் . மீன் கழிவுகள் அடியிலே தேங்கி நிற்கும். இந்த கரைசலிலிருந்து துளி கூட கெட்ட வாடை வீசாது, பழ வாடை‌வீசும்; இப்படி பழ வாசனை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்று பொருள்.

அமினோ அமிலம் என்பது வளர்ச்சிக்கு ஊக்கி,
இதை தெளித்தால் பயிர்கள் பசுமைகட்டி வளர்ந்து
நிற்கும். பத்து லிட்டர் நீரில் 200 மில்லி அமினோ அமிலம் கலந்து தெளிக்கலாம். ஒரு முறை தயாரிக்கும் அமினோ அமிலத்தை ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும்போது அமிலத்தை எடுத்து விட்டு பிறகு பாத்திரத்தை நன்கு மூடி வைக்கவும், நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த அமிலத்தை பாதுகாக்கவும்.

வேப்பங்கொட்டை கரைசல்

வேப்பங் கொட்டை கரைசல் பலன்கள்
பூச்சிகளை விரட்டி அடிக்கவும் , பயிர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள நோய்களை விரட்டி அடிக்கவும், இது பயன்படுகிறது.


செய்முறை:-
பத்து கிலோ வேப்பங் கொட்டையை
நன்கு தூளாக்கி, 20 லிட்டர் நீரில் கரைத்து,
24 மணி நேரம் வைத்திருக்கவும், பின்பு‌ இதை‌ வடி கட்டி 200 லிட்டர் நீருடன், 100 கிராம் காதி சோப் கரைசல் கலந்து ,கை தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் பயிர்களுக்கு தெளிக்கவும். ஏக்கருக்கு பத்திலிருந்து பன்னிரண்டு டேங்குகள் பிடிக்கும்.
இதனால் கம்பளிப்புழு ,அசுவினி ,தத்துபூச்சி, வெட்டுக்கிளி, புகையான், இலைசுருட்டு புழு, ஆணைக்கொம்பன், கதிர்நாவாய் பூச்சி ஆகியவை கட்டுப்படும். மேலும் சாம்பல்‌நோய், மஞ்சள் வைரஸ் நோய் போன்றவையும் கட்டுப்படும்.

நன்றி

திரு வெள்ளைச்சாமி.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்