Thursday, January 27, 2022

தினமும் விவசாய செய்திகள் (பொன்னீம் பூச்சி விரட்டி)

பொன்னீம் பூச்சி விரட்டி
புங்கன் எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய்
கொண்டு தயாரிக்கும் பூச்சி விரட்டி ஆகும்.
தீங்கு விளைவிக்கும் பூச்சி, தளிர் புழுக்கலைக் கொல்லுதல், பயிர்களில் முட்டையிடாமல் தடுத்தல், முட்டைகளை பொறிக்க‌விடாமல் ஆக்குதல், மற்றும் பூச்சிகள் இலைகளை தின்ன விடாமல் தடுத்தல், இதுவேவஅதன் வேலையாகும். அனைத்து‌ பயிர்களுக்கும் இதனை உபயோகிக்கலாம்.
தயாரிப்பு முறை
1.வேப்பெண்ணெய்‌‌. 450ml
2.புங்கன் எண்ணெய் 450 ml
3.காதி‌சோப் கரைசல் 100ml
இந்த மூன்றையும் ஒன்று சேர்த்து நன்கு கலக்கினால் பொன்னீம் தயார். பத்து லிட்டர் தெளிப்பானில் முதலில் 30ml/35ml பொன்னீம் ஏற்றவேண்டும், பின் 10லிட்டர் நீர் ஊற்ற வேண்டும், இப்படி செய்தால் பொன்னீம் நீரில் நன்கு கலந்துவிடும், பிறகு ‌குச்சியை வைத்து நன்கு கலக்கவும்; அசுவினி, தக்காளி, கத்திரி‌வெண்டை, மற்றும்‌ மிளகாய்‌ செடிகளைத் தாக்கும் காய்த்துளைப்பான், படைப்புழு நெல், தத்துபூச்சி, நெல் தண்டு‌துளைப்பான்,
ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும் இதை நானும் எனது தோட்டத்தில் மாப்பிள்ளை சம்பா நெற் பயிரில் முயற்சி செய்தேன் நல்ல பலன் கிடைத்தது.

நன்றி
திரு.வெள்ளைச்சாமி.

வளமிழந்த நிலத்தை வளமாக்கும் சூத்திரம்

வளமிழந்த நிலத்தை வளமாக்கவும் மற்றும்
ரசாயனம் உரநிலத்தை, இயற்கைக்கு மாற்றவும இதோ ஒரு நல்வழி:-
வாருங்கள் கற்போம், நமது விவசாயிகளுக்கும் கற்பிப்போம்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கான அளவு.


1.தானிய வகைகள் நான்கு
1.சோளம் 1கிலோ
2.கம்பு 500கிராம்
3.தினை 250கிராம்
4.சாமை 250கிராம்
ஆக மொத்தம் 2கிலோ அனைத்தும் சேர்த்து.

பயறு வகைகள் நான்கு
1.உளுந்து. 1கிலோ
2.பாசி பயறு ‌1கிலோ
3.தட்டை பயறு 1கிலோ
4.கொண்டை கடலை
அல்லது மூக்கு கடலை
ஒரு கிலோ
ஆக மொத்தம் 4 கிலோ
பசுந்தாள் வித்து நான்கு
1.தக்கை பூண்டு-2கலோ
2.சணப்பு‌-2 கிலோ
3.நரிப்பயறு-500கிராம்
4.கொள்ளு காணம்‌-1கிலோ

ஆக மொத்தம் 5.5 கிலோ
நறுமணப்பயிர்கள்
1.கடுகு-500கிராம்
2.வெந்தயம்-250கிராம்
3.சீரகம்- 250கிராம்
4.கொத்து மல்லி-1கிலோ
ஒவ்வொரு பயிர் விதைகளயும் உழுது, விதைகளை விதைத்து, நீர்பாய்ச்சி, 50நாட்கள் ஆனவுடன் பயிர்களை மடக்கி உழவேண்டும்;
இப்படியே எல்லா விதைகளையும் அந்தந்த குடும்பத்தோடு சேர்த்து உழவேண்டும். மொத்தம்
200 நாட்கள் ஆகும். இந்த காலத்தை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், இரண்டிரண்டு பிரிவுகளாக 100நாட்களில் உழுது, இயற்கை வேளாண்மையில் கால் பதிக்கலாம்.

நன்றி
திரு.வெள்ளைச்சாமி.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,143பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
19,100சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles