தினமும் இயற்கை விவசாய செய்தி (ரைசோபியம்,அசோஸ் பைரில்லம்,பாஸ்போ பாக்டீரியா)

0
375

ரைசோபியம்


இது பயறு வகைப் பயிர்களின் வேர் முடிச்சுப்
பகுதியில் வாழும் ஒரு வகை நுண்ணுயிரி,
அவரைச் செடி குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி, பயிரின்
வேர் பகுதியில் முடிச்சுகளை உண்டாக்குகிறது. காற்றிலிருந்து தழை சத்தை
மண்ணில் நிலை நிறுத்திவிட்டு தனக்குத்
தேவையான உணவைப்
பயிரின் வேர்பகுதியிலிருந்து
எடுத்து கொள்ளும். இதை
விதை நேர்த்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

பத்து விதைக்கு விதை நேர்த்தி செய்ய 200 கிராம் ரைசோபியம் தேவை.
200 மில்லி ஆறிய கஞ்சியுடன் 200 கிராம் ரைசோபியம் எனக் கலந்து அதில் விதைகளை இட்டு விதைகளோடு கலவை
ஒட்டுமாறு கலக்கி அரைமணிநேரம் நிழலில் உலர்த்தி விதைக்கவும். பயிரின் ரகம்
பயிரிடும் இடத்திற்கு உகந்த ரைசோபியம் வகைகளை வாங்கி பயன்படுத்தவும் .இது பொடியாகவும் திரவ வடிவிலும் கிடைக்கும்.

அசோஸ் பைரில்லம்

ஒரு விதை இலை தாவரம் மற்றும் எண்ணெய் வித்து‌ பயிர்களின் வேர் பகுதியில் வாழக்கூடியது
நெல், கம்பு‌, பருத்தி , கரும்பு
மக்காச்சோளம் போன்ற பயிர்களின் வேர் பகுதியில் வளரும் ஒரு
வகைப் பேக்டீரியா ; ஆனால் ரைசோபியம் போல் முடிச்சுகளை ஏற்படுத்தாது.

இது காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தும். 50 கிலோ ஒன்றிற்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம் எனக்கலந்து ஒரு‌ ஏக்கர் நிலத்தில் இடும்போது 20
கிலோ தழைச்சத்து மண்ணில் சேகரிக்கப்படும். இது கிட்டத்தட்ட 30 கிலோ
யூரியாவிற்ககு சமம் ,அதோடு ஐப்ராலிக் அமிலம் மற்றும் இண்டோல் அசிடிக் அமிலம் போன்ற பயிர்
வளர்ச்சி ஊக்கிகளும்
மண்ணில் உற்பத்தியாகும்.

இதை அனைத்து பயிர்களுக்கும் உபயோகிக்கலாம். இதை விதை நேர்த்தி செய்யவும் பயன்படுத்தலாம். இதை
விதை நேர்த்தி செய்யும் போது முளைப்பு திறன்
அதிகரிப்பதோடு வரட்சியை தாங்கும் தன்மையையும் அதிகரிக்கும். 250 கிராம் ஆறிய வடிகஞ்சியுடன்200
கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து அதில் ஒரு கிலோ விதையை ஊறவைத்து நிழலில் உலர்த்தி நடவு செய்யலாம். 20 லிட்டர் நீரில் 400 கிராம் அசோஸ் பைரில்லம் கலந்து அக்கலவையில் நாற்றுகள் அல்லது விதை கிழங்குகளை விதை நேர்த்தி செய்யலாம்.

பாஸ்போ பாக்டீரியா

இது மண்ணிலுள்ள மணிச்ச்சத்தை பயிர் எடுத்துக்கொள்ளும் வகையில் மண்ணை இறக்கிக் கொடுக்கும். இந்த வகை
பாக்டிரியாக்கள் உற்பத்தி செய்யும் சில அமிலங்கள் மண்ணில் கரையாத பாஸ்பேட்டை
கரைக்கின்றன. இதை பயன்படுத்துவதன் மூலம்
20 விழுக்காடு ரசாயன மணிச்சத்து உரத்தைக் குறைக்கலாம்; வேர்கள் திசுக்களின் வளர்ச்சியிலும் இந்த நுண்ணுயிர் முக்கிய பங்காற்றுகிறது.

நன்றி

திரு வெள்ளைச்சாமி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்