ரயில் நிலைய மேம்பாட்டு கட்டணத்தை பயணியரிடம் வசூலிக்க முடிவு

0
270

நவீனப் படுத்தப்பட்ட ரயில் நிலைய மேம்பாட்டு கட்டணத்தை பயணியரிடம் வசூலிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி ஒவ்வொரு பயணியிடமும் ‘ஏசி’ வகுப்புகளுக்கு 50 ரூபாய், துாங்கும் வசதி பெட்டிக்கு 25 மற்றும் சாதாரண வகுப்புக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும். டிக்கெட் மற்றும் முன்பதிவு கட்டணத்துடன் சேர்த்து இந்த தொகை பெறப்படும்.

பயணத்தில் ஒருமுறை மட்டும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துவோரிடம் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இதே ரயில் நிலையத்தை பயன்படுத்தும் புறநகர் ரயில் பயணியரிடம் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படாது. இது போன்ற ரயில் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்த பிறகே கட்டண முறை அமலுக்கு வரும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்