பிபின் ராவத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்-வை.கோ

0
185


முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது வாழ்விணையர், உட்பட 11 இராணுவ வீரர்கள் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இந்திய இராணுவத்தின் 27 ஆவது தலைமைத் தளபதியாக 2016 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஜெனரல் பிபின் ராவத், 2019 இல் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஜெனரல் பிபின் ராவத், ஐ.நா. அமைதிப் படையில் பன்னாட்டு இராணுவ வீரர்கள் கொண்ட படைக்கு தலைமை வகித்து, காங்கோ நாடு சென்றார். பல களங்களில் அவரது போர்த் திறனும், துணிச்சலும் வெளிப்பட்டு இருக்கின்றன. இந்திய இராணுவத்தை நவீனமயமாக்கவும், இராணுவக்கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதிலும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது.

ஜெனரல் பிபின் ராவத் தனது பணிக்காலத்தில் திறம்படப் பணியாற்றியதால், உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில், முப்படைத்தலைமைத்தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்