Tuesday, December 7, 2021

உள்ளாட்சி தேர்தலில் பாஜக,அதிமுக கூட்டணி கட்சிகளோடு கைகோர்த்த ‘தேவேந்திர சேனா’ அமைப்பு.

நேற்று (2.10.2021) ‘தேவேந்திர சேனாவின்’ துணைத்தலைவர் கல்வியாளர் அ.குணசேகர் அவர்கள் தலைமையிலான தமிழக உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு அ.க.ஸ்டாலின், ப.அருமைத்துரை, S.மாரிதுரைச்சாமி, மா. வள்ளாலசேகர், p.முகேஷ் குமார், p.அசோக்குமார், N.பாஸ்கர், ஆகியோர் அடங்கிய ‘தேவேந்திர சேனா’ அமைப்பு நில்வாகிகள் நெல்லை மாவட்டம் முழுவதும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக களமிறங்கியது.

அதன்படி இன்று பேட்டை கோடிஸ்வரன் நகர், திருப்பணிகரிசல்குளம், கொண்டாநகரம், சுத்தமல்லி விலக்கு, வ.உ.சி நகர், சுத்தமல்லி, பழவூர், பட்டன் கல்லூர், நடுக்கல்லூர், மேலக் கல்லூர், வடக்கு சங்கன்திரடு, தெற்கு சங்கன்திரடு, சிறுக்கன்குறிச்சி போன்ற இடங்களுக்கு நேரில் சென்று, பொது மக்களையும், கட்சி நிர்வாகிகளையும், கூட்டணி கட்சியை சார்ந்தவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டியது.

மேலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அமோக வெற்றிபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.இதில் நெல்லை மாவட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் திரு நயினார் நாகேந்திரன், பாஜக பட்டியல் அணி துணைத்தலைவர் முருகானந்தம், முன்னால் மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட செயலாளர் முத்துபலவேசம், அதிமுகவை சேர்ந்த கல்லூர் வேலாயுதம், ஆல்வின் முருகேசன், மற்றும் பாஜக,அதிமுக,தேவேந்திர சேனா, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles