‘தேவேந்திர சேனா’ அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி சேகர், பொதுச்செயலாளர் பேராசிரியர் மனோகர், பொருளாளர் வேளச்செரி ரவிசங்கர், ஒப்புதல் மற்றும் ஆலோசனையின்படி முன்னர் நடந்த உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி , தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இன்று (2.10.2021) ‘தேவேந்திர சேனாவின்’ துணைத்தலைவர் கல்வியாளர் அ.குணசேகர் அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் குழு அ.க.ஸ்டாலின், ப.அருமைத்துரை, S.மாரிதுரைச்சாமி, மா. வள்ளாலசேகர், p.முகேஷ் குமார், p.அசோக்குமார், N.பாஸ்கர், ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு நெல்லை மாவட்டம் முழுவதும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக களமிறங்கியது.அதன்படி இன்று பேட்டை கோடிஸ்வரன் நகர், திருப்பணிகரிசல்குளம், கொண்டாநகரம், சுத்தமல்லி விலக்கு, வ.உ.சி நகர், சுத்தமல்லி, பழவூர், பட்டன் கல்லூர், நடுக்கல்லூர், மேலக் கல்லூர், வடக்கு சங்கன்திரடு, தெற்கு சங்கன்திரடு, சிறுக்கன்குறிச்சி போன்ற இடங்களுக்கு நேரில் சென்று, பொது மக்களையும், கட்சி நிர்வாகிகளையும், கூட்டணி கட்சியை சார்ந்தவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டியது.மேலும் வேட்பாளர்கள் அமோக வெற்றிபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்