நாகர்கோவில் ‘குமரி தன சக்தி லிமிடெட்’ வங்கி விழாவில் ‘தேவேந்திர சேனா’ பங்கேற்பு

0
170

இன்று (17.10.2021) ‘குமரி தனசக்தி நிதி லிமிடெட்’ வங்கியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெள்ளிமலை பூஜன்யசுவாமி சைதன்யானந்த் ஜி மகாராஜ் அவர்கள் ஆசியுரை வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் ‘தேவேந்திர சேனா’ மாநில துணைத் தலைவர் முனைவர் அ.குணசேகர் அவர்கள் சிறப்புரையற்றினார்கள், அதனை தொடர்ந்து A.ஆதிசுவாமி, ‘மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா டிரஸ்ட் ‘ தலைவர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள், மேலும் Dr.R. அருண்குமார் (செயலாளர்) ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் ‘முனைவர் குணசேகர் பொது பணிப் பேரவை’ குமரி மாவட்ட நிறுவனத்தலைவர் சங்கர் சிவப்பிரகாசம் , ‘தேவேந்திர சேனா’ நிர்வாகிகள் அ.க.ஸ்டாலின், பா.அருமைத்துரை, சு.மாரிதுரை சாமி , N.பாஸ்கர் , வங்கி பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்