மீண்டும் மோடி பிரதமராக தேவேந்திரசேனா வழிபாடு

0
169

வரும் 2024 ல் பாரதப் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவதற்காக கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தேவேந்திர சேனா சிறப்பு வழிபாடு நடத்தியது, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பாஜக ஆட்சி மிகச்சிறப்பாக இருக்கவும், மீண்டும் 2024-ல் மாபெரும் வெற்றி பெறவும் வேண்டி, கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு தேவேந்திர சேனா அமைப்பால் நடத்தப்பட்டது.


தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது,1100 ஆண்டு பழமையான இக்கோவிலில், இன்று ‘தேவேந்திர சேனா’சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இதில் தேவேந்திர சேனா மாநில துணைத்தலைவர் கல்வியாளர், முனைவர் அ. குணசேகர் கலந்து கொண்டார்.

பூஜையில் வரும் 2024-லும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தொடரவும், உலக மக்கள் சுபிட்ஷமாக வாழவும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பெயரில், அர்ச்சனை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாரி துரைசாமி, பாஸ்கர் உள்ளிட்ட ‘தேவேந்திர சேனா’ நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பூஜையை நரசிம்மர் கோவில் தலைமை குருக்கள் ஆனந்த் பட்டர் சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்