Sunday, October 24, 2021

‘தேவேந்திர சேனா’ அமைப்பு உள்ளாட்சி தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு !

இன்று ‘தேவேந்திர சேனா’ அமைப்பு சார்பில் நடைபெறவிருக்கும் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ‘செல் டவர்’ கேடிசி நகரில் வைத்து நடைபெற்றது !

அக்கூட்ட ஆலோசனையின்படி ஏகமனதாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு முழு ஆதரவு தருவதென்றும், பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் பங்கெடுத்து துணைநிற்பதென்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளரின் வெற்றியிலும் ‘தேவேந்திர சேனா’ அமைப்பினரின் பங்கினை பதியவைத்து வெற்றிக்கனியை பறித்து கொடுக்கவேண்டுமென உறுதியெடுக்கப்பட்டது.

வரும் அக்டோபர் 6 மற்றும் 9ல் இரு கட்டமாக நடைபெறவிருக்கின்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக ‘தேவேந்திர சேனா’ அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி சேகர், பொதுச்செயலாளர் பேராசிரியர் மனோகர், பொருளாளர் வேளச்செரி, ரவிசங்கர் ஆகியோரின் ஒப்புதல் மற்றும் ஆலோசனையின்படி நடந்த தேர்தல் கூட்டத்திற்கு, ‘தேவேந்திர சேனாவின்’ துணைத்தலைவர் கல்வியாளர் அ.குணசேகர் அவர்கள் தலைமையில், கே.டி.சி நகர் ‘செல் டவர்’ வெனியூவில் வைத்து திரு அ.க.ஸ்டாலின்,திரு அருமைத்துரை, திரு அசோக்குமார் மற்றும் நிர்வாகிகளின் முன்னிலையில், அமைப்பு நிர்வாகிகளுடன் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தங்கள் முழு ஆதரவை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனைவரும் வீதிவீதியாகச்சென்று களப்பணியாற்றி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூட துணைநிற்பதென உறுதியெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
2,994பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,700சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles