திருக்குறங்குடி மழை காரணமாக மலையில் பக்தர்கள் தவிப்பு

0
190

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் பத்தர்கள் சிக்கி தவிக்கின்றனர்.


நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. தமிழக அரசு வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ள நிலையில் நேற்று முதல் பக்தர்கள் நம்பி கோவிலுக்கு யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடைசி புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். திருமலையில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர்.


தீயணைப்பு துறையினர்,வனத்துறையினர் , காவலர்கள் உதவியுடன் பக்தர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்