சுவாமி மீது “வெண்ணெயை வீசி” பக்தர்கள் வழிபாடு

0
190

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது சுவாமி மீது வெண்ணையை வீசி பக்தர்கள் வழிபட்டனர்.

கடந்த 19ஆம் தேதி இந்த கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழாவின் 16 வது நாளான இன்று ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணைத்தாழி உற்சவம் நடைபெற்றது. கோவிலிலிருந்து பல்லக்கில் உலாவந்த சுவாமியின் மீது வெற்றிலை மீது வெண்ணையை வைத்து வீசி பக்தர்கள் வழிபட்டனர்.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று இரவு ராஜகோபால சுவாமி தங்க குதிரையில் எழுந்தருளி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்