நவீன விவசாயம் செய்து அசத்தும் டிஜிட்டல் விவசாயி

0
302

பல்லடம் பகுதியில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து பூக்கள் மற்றும் பயிர் சாகுபடியில் அசத்தி வருகிறார் இயற்கை விவசாயி ஒருவர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னிய கவுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார். 6 ஏக்கர் பரப்பளவில் ஜாதி முல்லை, ரோஜா, மல்லி ஆகிய மலர்களை சாகுபடி செய்து வருகிறார். பூக்கள் சாகுபடியில் மருந்து தெளிப்பது முக்கியமானது என்பதால், மருந்து தெளிப்பதற்கு வித்தியாசமான முறையைக் கையில் எடுத்துள்ளார் சுகுமார்.

கையில் வைத்து மருந்தைத் தெளிப்பதால் ஏற்படும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் அனைத்தும், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் தவிர்க்கப்படுவதாக விவசாயி சுகுமார் தெரிவிக்கிறார். மேலும், இதன்மூலம் நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை செலவு குறைவதாகவும் அவர் கூறுகிறார். இதனை இயக்குவது மிக எளிதாக இருப்பதால், தனி ஒரு ஆளாக ட்ரோன் மூலம் மருந்தைத் தெளித்து, 6 ஏக்கருக்கும் அரை மணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டு மற்ற வேலைகளுக்கு செல்வதாகவும் கூறுகிறார் சுகுமார். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக நவீன முறையைக் கையாண்டு, ட்ரோனை பயன்படுத்தி சுகுமார் விவசாயம் செய்து வருவதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்