திமுக எம்.எல்.ஏ. புகார்-சபாநாயகர் அவை குறிப்பிலிருந்து நீக்கினார்

0
215

மத்திய அரசு மீது திமுக எம்.எல்.ஏ. புகார்- அவை குறிப்பில் இருந்து அதிரடியாக நீக்கிய சபாநாயகர் அப்பாவு.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் மானியம் ஆகியவற்றை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜ் விமர்சித்து பேசியதை சட்டசபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின் போது பேசிய எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜ், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் மண்ணெண்ணெய் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் மற்றும் விலை உயர்வு குறித்து மத்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தார் இனிக்கோ இருதயராஜ்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்தின் போது கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும். மத்திய அரசு ஏமாற்றிவிட்டது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்