காஞ்சிபுரத்தில் மர்மகும்பலால் தி.மு.க. நிர்வாகி வெட்டிப்படுகொலை

0
311

காஞ்சிபுரம் அருகே உள்ள கோனேரிகுப்பத்தில் திமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள கோனேரிகுப்பம். இந்த ஊராட்சியின் தலைவராக சைலஜா உள்ளார். இவரது கணவர் சேகர், இவர் திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். ஏற்கனவே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 25) காலை 9 மணியளவில் கோனேரிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் சராமாரியாக வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த காஞ்சிபுரம் எஸ்.பி., மற்றும் டி.ஜ.ஜி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளும் கட்சியை சார்ந்த நிர்வாகி ஒருவர் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காஞ்சிபுரம் அரசியல் பிரமுகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்