சென்னையில் திமுக வட்டச்செயலாளர் படுகொலை.

0
156

(02-02-2022) சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம், வயது 38. திமுக வட்ட செயலாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் நேற்று சென்னை ராஜாஜி நகர் பகுதியில் தனது கட்சிக்காரர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். திமுகவில் 188 வார்டு வட்ட செயலாளராக உள்ள அவரை உடன் வந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலைக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.காவல்துறையினர் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். செல்வம் நடக்கவிருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனது மனைவியை வேட்பாளராக நிறுத்தி அதற்கான வேலைகளை மும்முரமாக செய்து வந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பகையின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்