உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் – 90 சதவீத இடங்களைக் கைப்பற்றி “திமுக” வெற்றி.

0
163

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி அமைப்புகளில் மொத்தமுள்ள 12,838 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல், நடைபெற்று வாக்கு எண்ணும் பணியும் நேற்று நிறைவுற்றது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக வெற்றிபெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளுக்கான மேயர்களை திமுக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 138 நகராட்சிகளில் 134 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன.

அதேபோல 489 பேரூராட்சிகளில் 435 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன. 16 பேரூராட்சிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இப்படி பேரூராட்சிகள்,நகராட்சிகள்,மாநகராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பெரும்பாலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே வெற்றிபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக 90 சதவிகித இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்