பிலிப்பைன்ஸில் “டால் எரிமலை வெடிப்பு அபாயம்” -ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்.

0
269

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள டால் எரிமலை, சாம்பல் மற்றும் புகையை வெளியிட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலையானது திடீரென சாம்பல் மற்றும் புகையை அதிகளவில் வெளியிட்டு வருகிறது .

இந்த எரிமலை தலைநகருக்கு அருகிலேயே இருப்பதால் மணிலாவில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த எரிமலையானது பல கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்