தேவேந்திர குல வேளாளர்” பெயர் அறிவிப்பு – முனைவர் அ.குணசேகர் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கை.

0
187

கடந்த ஆண்டு இதே நாளில் ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து “தேவேந்திர குல வேளாளர்” எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வழங்கிய “மாண்புமிகு பாரத பிரதமர்” நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து “தேவேந்திர குல வேளாளர் கலாச்சார மையம்” அமைப்பின் தலைவரும், கல்வியாளருமான முனைவர் அ.குணசேகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வான்புகழ் கொண்ட வள்ளுவரே, உலகின் எந்த தொழிலுக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை உழவுத் தொழிலுக்குக் கொடுத்து திருக்குறளில் ஒரு அதிகாரத்தையே நிறுவினார்.

“சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை”

என்ற குறட்பா மூலம் “உலகப் பொதுமறை வேந்தர். வள்ளுவர், வேளாண் தொழில் செய்யும் குடிமக்களால் மட்டுமே உலகம் சுழன்று கொண்டு இருப்பதாக உழவுத் தொழிலைப் போற்றிப் பறை சாற்றினார்”.அதற்கு முழு இலக்கணமாய்த் திகழும் ‘உலகின் முதல் வேளாண்குடி மக்களாகிய, தேவேந்திர குல வேளாளர்’ சமூக மக்களை தமிழகத்தில் பள்ளர், குடும்பர், தேவேந்திர குலத்தார், கடையர், காலாடி, வாதிரியார், பண்ணாடி எனக் கடந்த கால ஆட்சியியல் வரலாறு பிரித்து வைத்திருந்தது. உலகிற்கே நெல் நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த உலகின் மூத்த பண்பாட்டு மாந்தனும் இவனே.

மனிதப் பரிமாணக் கோட்பாட்டுவியலின் அடிப்படையில், “பூமியின் பிற வெளிகளில் மனிதன் உடையின்றித் திரிந்த காலத்தே, குமரிப் பெருந்தேசத்தில் மாடுகட்டி ஏர்ப்பூட்டி மண்ணுழுது மாமன்றம் அமைத்து அரசாண்டவன் தமிழன்” என்பது எவ்வித ஆய்விலும் எவராலும் மறுக்க முடியாததே. அப்பெயர்பெற்ற இவ்வேளாண்குடி மக்களைக் கடந்த காலத் தமிழக அரசியல் வரலாற்றில் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் எவ்விடத்தில் வைத்திருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

“தமிழகத்திலும், அகில இந்தியாவிலும் எந்த ஒரு முதன்மையான கட்சியும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு அரசியல் அங்கீகாரமும் ஆட்சியில் முக்கியத்துவமும் கொடுக்காமல் புறக்கணித்து வந்ததை பல்வேறு அறிக்கைகள் மெய்ப்பிக்கின்றன.தேர்தலில் வாக்குகளுக்காக மட்டுமே ஆட்சியாளர்கள் இச்சமூக மக்களைப் பயன்படுத்தியதற்குத் தக்க சான்றுகள் உள்ளன.இப்படி சொல்லிலடங்கா வலிகளைச் சுமந்து நின்ற ‘தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள்’ அதற்கானத் தீர்வைக் கண்டறிந்து, இச்சமூகத்தில் உள்ள 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தங்களை “தேவேந்திர குல வேளாளர்” என்ற ஒற்றைப் பெயரில் அழைக்கவேண்டும் மற்றும் எஸ்சி பட்டியலில் இருந்து தங்களை வெளியேற்ற வேண்டும்” என்ற முதன்மையான கோரிக்கைகளை முன்னிறுத்தி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

இச்சமூக மக்களின் வலிகளை சரியாகப் புரிந்துகொண்டு,கடந்தாண்டு இதே நாளில் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற அரசாணைக்கு ஒப்புதல் வழங்கிய “மாண்புமிகு குடியரசுத் தலைவர்” அவர்களுக்கும், இச்சமூக மக்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து இச்சமூக மக்களின் நீண்ட நாள் கனவான தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றக் கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றிய “மாண்புமிகு பாரத பிரதமர்” நரேந்திர மோடி அவர்களுக்கும் இச்சமூக மக்களின் சார்பாகவும், “தேவேந்திர குல வேளாளர் கலாச்சார மையம்” அமைப்பின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தனது அறிக்கையில் முனைவர் அ.குணசேகர் குறிப்பிட்டுள்ளார்.

Dr.GunaSekar Wished Ms.Sunitha Duggal

மேலும் தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் மாற்ற அரசாணைக்கு முதன்முதலில் ஆசி வழங்கிய “போற்றுதற்குரிய” சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்கும், அரசாணை வழங்கிட உறுதுணையாக இருந்த மாண்புமிகு “உள்துறை அமைச்சர்” அமித்ஷா அவர்களுக்கும், பெயர் மாற்றத்திற்காக முழு ஆதரவையும் அளித்த “மாண்புமிகு நிதியமைச்சர்” திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும்,தேவேந்திரகுலவேளாளர் மானுடவியல் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து அரசாணைக்கு பரிந்துரை செய்த மரியாதைக்குரிய “முன்னாள் முதல்வர்” எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், மரியாதைக்குரிய முன்னாள் “துணை முதல்வர்” ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அரசாணைக்கு தனது முழு பங்களிப்பையும் தந்துதவிய “மரியாதைக்குரிய துக்ளக் ஆசிரியர் “ஆடிட்டர். குருமூர்த்தி அவர்களுக்கும்,

நாடாளுமன்றத்தில் இச்சமுதாய மக்களுக்காக குரல் கொடுத்த மதிப்புமிக்க “நாடாளுமன்ற உறுப்பினர்” திருமதி. சுனிதா துக்கல் அவர்களுக்கும், அரசாணைக்கு முழு ஒத்துழைப்பும் அளித்த மதிப்புமிக்க “பாஜக மாநில செயலாளர்” பேராசிரியர் இராம. சீனிவாசன் அவர்களுக்கும், நாடாளுமன்றத்தில் இச்சமூக மக்களுக்காக குரல் கொடுத்த “அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்” மதிப்பிற்குரிய திரு.நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கும், சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக முன்மொழிந்த “மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்” திரு.மாணிக்கம் தாகூர் அவர்களுக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் சார்பாகவும் “தேவேந்திர குல வேளாளர் கலாச்சார மையம்” அமைப்பின் சார்பாகவும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் முனைவர் அ. குணசேகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வி.தமிழ்நெறி ,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்