நெல்லை மேயர் பதவியை ‘தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கே’ வழங்க வேண்டும் – “முனைவர் குணசேகர்” வலியுறுத்தல்.

0
193

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவியை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கே வழங்க வேண்டும் என “தேவேந்திரகுல வேளாளர் கலாச்சார மையம்” என்ற அமைப்பின் தலைவர் “முனைவர் குணசேகர்” வலியுறுத்தி உள்ளார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. அதேபோல, நெல்லை மாநகராட்சியிலும் திமுக சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இம்முறை நெல்லை மாநகராட்சியில் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேயர் பதவியை மறுபரிசீலனை செய்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஏற்கனவே திமுக வானது, நெல்லை மாநகராட்சி மேயர் பதவியை தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த “உமாமகேஸ்வரி” என்ற பெண்ணிற்கு வழங்கியுள்ளதாகவும், கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு தேவேந்திரகுல மக்களின் மிகப்பெரிய பங்களிப்பு தான் காரணம் எனவும் தெரிவித்த அவர், அதன் காரணமாகவே ‘தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களுக்கு திமுக அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநகராட்சி மேயர் பதவிகளை அதிகமாக இச்சமூகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் திமுக தலைமைக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழக அமைச்சரவையிலும் இச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே அமைச்சராக இருக்கும் இந்நிலையை மாற்றி “சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இராஜா” போன்ற சிறந்தவர்களை அமைச்சரவையில் இணைத்து ஆளும் அரசானது தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்