பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தல் – இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை

0
59

பாகிஸ்தானிலிருந்து 280 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை இந்தியாவிற்கு கடத்தி வந்த 9 பேரை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். கடலோரக் காவல் படையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு படையினர் ஆகியோர் வழக்கமாக அரபிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் படகு ஒன்று இந்தியக் கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்தப் படகை சோதனை செய்த கடலோரக் காவல் படையினர் படகில் சிறுசிறு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை முதற்கட்டமாக பறிமுதல் செய்தனர்.

Indian authorities apprehend Pakistani ship with heroin worth Rs 280 crore

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருட்களின் சர்வதேச மதிப்பு 280 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்படையினர் போதை பொருளைக் கடத்தி வந்த படகிலிருந்த 9 பேரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்