ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம்..

0
186

ஆப்கானிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று இந்திய நேரப்படி காலை 9.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அஸ்காசத்திலிருந்து தென்மேற்கு திசையில் 45 கிலோமீட்டர் தொலைவில் தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.

தரைக்கு கீழே 209 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது இந்தியாவின் காஷ்மீர் மற்றும் நொய்டா போன்ற இடங்களில் உணரப்பட்டதாகவும் வீடுகள் மற்றும் கட்டடங்களில் லேசான அதிர்வுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது . இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் பரவுகிறது.
தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்