பயணிகள் புகார் எதிரொலி ; அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்.

0
278

தரமற்ற உணவகத்தில் பேருந்தை நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பேருந்து நிறுத்தப்பட்ட உணவகம் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இல்லாததால் உணவு தரம் இல்லாமல் வழங்கியதும் தெரியவந்தது.

கடந்த 10ஆம் தேதி சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலத்தில் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது விக்கிரவாண்டியில் உள்ள ஒரு உணவகத்தில் பயணிகள் சாப்பிடுவது என்ற ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி உள்ளார்.

தரமற்ற உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது குறித்து பயணிகள் விருதாச்சலம் பணிமனையில் புகார் அளித்தனர் பயணிகள் அளித்த புகாரை தொடர்ந்து ஓட்டுனர் விஜயகுமார் நடத்துனர் சேட்டு ஆகியோர் பணிஇடைநீக்கம் செய்து கடலூர் மண்டல பொது மேலாளர் மாரிமுத்து உத்தரவிட்டார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்