பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், கல்வியாளர் குணசேகர் சந்திப்பு..

0
371

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் கல்வியாளர், முனைவர் அ.குணசேகர், தமிழக பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசனை மரியாதையை நிமித்தமாக நேற்று மதுரையில் சந்தித்தார். தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் தங்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் அல்லது பொதுப்பிரிவில் சேர்க்க வலியுறுத்திவரும் நிலையில் இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தேவேந்திர குல வேளாளர் பெயர் திருத்த அரசாணை நிறைவேறியதில், மூல காரணமாக இருந்த அரசியல் ஆளுமைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் பேராசிரியர் பாண்டியன், மள்ளர் கனிராஜ், பா. அருமைத்துரை, அ.க.ஸ்டாலின், பெ. அசோக்குமார், மாரிதுரைசாமி, N.பாஸ்கர், அருண்பாண்டியன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்