பாஜகவில் இணைந்தார் “கல்வியாளர் முனைவர்” அ.குணசேகர்

0
312

“தேவேந்திரகுல வேளாளர் கலாச்சார மையம்” என்ற அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ‘கல்வியாளர் முனைவர்’ அ.குணசேகர் இன்று அதிகாரபூர்வமாக தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து “தேவேந்திரகுல வேளாளர்” என்ற ஒற்றை பெயரில் தங்களை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக அரசானது கடந்த ஆண்டு ஏற்றுக்கொண்டு அதிகாரபூர்வமான பெயர் மாற்ற அரசாணையை வழங்கியது.

தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு வேறு எந்த கட்சியிலும் சரியான முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் கொடுக்கப்படாத நிலையில் பாரதிய ஜனதா கட்சியானது இவ்வாறான அரசாணையை அறிவித்திருப்பதும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு பாஜகவில் முக்கியமான பதவிகள் கொடுக்கப்பட்டு இருப்பதையும் ஏற்கனவே கல்வியாளர் குணசேகர் அவர்கள் பாஜகவின் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி,மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழகத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தும் பாராட்டு கூட்டங்களையும் நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் தனது சொந்த செலவில் பல்வேறு கூட்டங்களையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கல்வியாளர் குணசேகர் அவர்கள் நடத்தியிருந்தார். பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணையாமல் இவ்வாறான மத்திய அரசிற்கு தனது முழு ஆதரவையும் கட்சிக்கு வெளியில் இருந்து செயல்படுத்தி வந்த முனைவர் குணசேகர் அவர்கள் இன்று காலை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான திரு. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைத்துக்கொண்டார்

அவருடன் பாஜக மாவட்டத் தலைவர் தயாசங்கர், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் டிவி சுரேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் முத்து பலவேசம், தொழில் பிரிவு மாநில செயலாளர் சுபாஷ், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்எஸ் சுந்தர் ராஜபாண்டியன், அரசு ஒப்பந்ததாரர் அ.க.ஸ்டாலின் மற்றும் தொழிலதிபர் அருமை துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்