நீட் தேர்வில் தேர்வான அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வியாளர் குணசேகர் உதவி

0
293

திருநெல்வேலி கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகள் 7 பேர்
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வி படிக்க தேர்வாகியுள்ளார். இந்த நிலையில்
மாணவிகளுக்குபாராட்டு விழா பள்ளியில் நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நாச்சியார் தலைமை வகித்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கல்வியாளர் முனைவர் அ .குணசேகர் கலந்துகொண்டார். பின்னர் அவர் மாணவிகளுக்கு சிறப்பு பரிசாக ஸ்டெதாஸ் கோப் வழங்கினார்.நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகள் 7 பேருக்கும் 4 1/2 ஆண்டு காலம் படிக்கும் புத்தகங்களை இலவசமாக தன் சொந்த செலவில் வழங்குவதாக அறிவித்தார். இந்நிகழ்சசியில் பள்ளியின் ஆசிரியர்கள் , மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் , தொழிலதிபர் ரபீந்திர சைலபதி, புத்தனேரி முத்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பெற்றோர்களும் மற்றும் ஆசிரியர்களும் கல்வியளர் முனைவர் குணசேகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

பெ. சூர்யா , நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்