பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதில்.

0
189

சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் நெல்லை, கோவை,சென்னை போன்ற இடங்களில் அக்கட்சி அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் நிறைய வாக்குச்சாவடிகளில் அவர்கள் கள்ள ஓட்டுகளைச் செலுத்தியதாகவும் கூறியிருந்தார். மேலும் இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகாரும் தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்திருந்தார்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையமானது இதை பார்த்தாவது விழித்துக்கொள்ள வேண்டும், தேர்தலை நியாயமாக நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எப்பொழுதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில் இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்து பதிவிட்டிருந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இப்பதிவுக்கு தற்போது இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையமானது அரசியல் சட்டப் பிரிவுகளைக் குறிப்பிட்டு “ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலை நாங்கள் நடத்துவது கிடையாது” என்று பதிலளித்துள்ளது. “மாநில தேர்தல் ஆணையம்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்” எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அண்ணாமலைக்கு பதில் அளித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்