திருவைகுண்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்..

0
163

தமிழகத்தில் 489 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள், மற்றும் 21 மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் திமுகவும் இரண்டாவதாக அதிமுகவும் வெற்றிபெற்றிருக்கும் இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பேரூராட்சியில் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

srivaikundam dam

மொத்தம் 18 வார்டுகள் கொண்ட திருவைகுண்டம் பேரூராட்சியில் 12ஆவது வார்டு வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திமுகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஆனது, வாக்கு எண்ணும் பணிக்கு இடையூறாக இருந்ததால் தற்காலிகமாக திருவைகுண்டம் பேரூராட்சியின் 12ஆவது வார்டின் வாக்கு எண்ணும் பணியானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்