கனடாவில் எமர்ஜென்சி அமல் – கனடா பிரதமர் உத்தரவு.

0
171

லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற கனடாவின் அறிவிப்பால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடாவில் போராட்டம் வெடித்தது. லாரி ஓட்டுநர்கள் ஆயிரக்கணக்கான லாரிகளுடன் கனடா தலைநகருக்கு விரைந்தனர்.. கனடா பிரதமருக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்தது அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இந்நிலையில் “பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர்” அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அமெரிக்கா கனடாவை இணைக்கும் முக்கியமான பாலமானது முடக்கப்பட்டது.. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே தற்போது கனடாவில் நாடு முழுவதும் அவசர நிலையைப் பிறப்பித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.. இதன் மூலம் போராட்டக்காரர்களைக் கைது செய்யவும் போராட்டக் காரர்களின் லாரிகளை பறிமுதல் செய்யவும் காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகள் கழித்து கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.. எனினும் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக இதுவரை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்