எஸ்டோனியா,லாட்வியா வான்வெளியைப் பயன்படுத்த ரஷ்யாவிற்குத் தடை.

0
347

3 நாட்களாக நீடிக்கும் உக்ரைன் ரஷ்யப் போர் சூழலில், போலந்து, செக் குடியரசு, பல்கேரியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளும் தங்கள் நாட்டு வான்வெளியில் ரஷ்யப் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை பறக்கத் தடை விதித்துள்ளன. உக்ரைன் ரஷ்யப் போர் தீவிரமடைந்துள்ள இசூழ்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவளித்து ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் வர்த்தகத் தடைகளையும் விதித்து வருகின்றன.

உக்ரைனுக்கு ஆதரவாக 40,000 க்கும் மேற்பட்ட நேட்டோ படைகள் ரஷ்யாவை எதிர் கொள்ள தயாராகி வருவதையும், ரஷ்யாவை எதிர்த்து உக்ரைனுடன் இணைந்து பெரும் போரை நடத்த தயாராக இருப்பதாக பிரான்ஸ் அறிவித்திருப்பதும் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் போலந்து, செக் குடியரசு, பல்கேரியா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த ஏற்கனவே ரஷ்யாவிற்குத் தடை விதித்திருந்தன.
இந்நிலையில் தற்போது எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளும் தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்யப் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவை பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்