ரஷ்யாவின் எரிபொருளை நிராகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்.

0
284

ரஷ்யாவின் உக்ரைன் எதிர்ப்புப் போர் நடவடிக்கையால் பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளையும் கடும் எதிர்ப்புகளையும் ரஷ்யா சந்தித்து வருகிறது. இதனால் தற்போது வரை ரஷ்யா வணிக ரீதியாக பெரும் பொருளாதார சரிவுகளைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை வேறு நாடுகளிலிருந்து வாங்குவதற்கான பரிந்துரை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்