சாத்தான்குளம் ஊராட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் பரபரப்பு

0
201

சாத்தான்குளம் அருகே பொதுமக்களுக்கு சரியான முறையில் சேவை செய்ய முடியவில்லை என கூறி ஊராட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி கிராம பஞ்சாயத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது 3-வது வார்டு மற்றும் 4-வது வார்டு பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சேவை செய்து வரும், ஊராட்சி உறுப்பினர்களான சுயம்புக்கனி மற்றும் உமா ஆகியோர் கடந்த ஒன்றரை வருடங்களாக மக்கள் சேவை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆறு மாதகாலமாக தாமரைமொழி பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி உறுப்பினர்களான சுயம்புகனி மற்றும் உமா ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலருக்கு நேரில் மனு அளித்தும், கண்டுகொள்ளாமல் இருந்த காரணத்தால் ?இன்றைய தினம், தங்களால் பொதுமக்களுக்கு திறம்பட சேவை செய்ய முடியவில்லை எனக்கூறி, சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன் முன்னிலையில் தங்களது ஊராட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நேரில் சென்று கடிதம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்