விரைவு ரெயில் கட்டணம் உயருகின்றது

0
152


தாம்பரம், காட்பாடி ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. எனவே இந்த ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களின் கட்டணம் 50 ரூபாய் உயர்த்தப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுத்துறைகளை, அரசு நிறுவனங்களை மத்திய அரசு அசுர வேகத்தில் தனியார்மயமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதற்கேற்ப அரசு பணத்தில் அவற்றை மேம்படுத்தி குறைந்த விலையில் தனியாருக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்நிலையங்கள், ரயில்கள் போன்றவற்றையும் தனியார்மயமாக்கி வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையங்களின் மேம்பாடு மற்றும் மறு சீரமைப்புக்கு ரயில்வே துறை பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக தாம்பரம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மேம்படுத்தவுள்ளது.
இதற்காக இந்த 2 ரெயில் நிலையங்களில் இருந்து செல்லும் விரைவு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் விரைவு ரயிலில் பயணம் செய்ய படுக்கை வசதிக்கொண்ட வகுப்புக்கு ரூ.25 கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தற்போது அதிவேக ரயில் (சூப்பர் பாஸ்ட்), விரைவு குளிர்சாதன ரயில் (ஏ.சி.எக்ஸ்பிரஸ்), சிறப்பு ரயில்கள் என பல்வேறு வகையாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வகைப்பாடுகளின் காரணமாக ரெயில் கட்டணங்களில் பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.

தற்போது மேம்படுத்தும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதால் பயணிகள் இன்னும் கூடுதல் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளன. எந்தெந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போதைக்கு தாம்பரம், காட்பாடி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதனால் அங்கிருந்து செல்லும் பயணிகளுக்கு மேம்பாட்டு கட்டணம் உயருகிறது” என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்