கொடைக்கானலில் பொதுமக்களை நடுங்கவைக்கும் கடும் குளிர்

0
393

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகாலை ஏரி சாலையில் சுமார் 5 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியது. காலை நேரத்தில் ஏரி தண்ணீர் மீது சூரிய ஒளி பட்டவுடன், அதில் படர்ந்திருந்த பனி ஆவியான காட்சி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது.

காலை 9 மணி வரை நகர் பகுதி முழுவதும் பனி படர்ந்து காணப்படுகிறது.
மேலும் மாலை 5 மணிக்கே பனிப்பொழிவு தொடங்கிவிடுகிறது. நடுங்க வைக்கும் கடும் குளிரால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்