கண் பார்வையைத் தெளிவாக்கவும் கண்களை வலுப்படுத்தவும் எளிய வழி :

0
137

இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் கண் பார்வைக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் . அதற்குக் காரணம் அதிக நேரம் “செல்போன் பயன்படுத்துதல் , லேப்டாப் பயன்படுத்துதல் , வீடியோகேம் விளையாடுதல்” போன்றவையே . குழந்தைகள் அதிக நேரம் வீடியோகேம் விளையாடுவதால் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இளைஞர்களும் நேரங்காலம் பார்க்காமல் எப்போதும் ஆண்ட்ராய்டு போனிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் . அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வேறு வழி இன்றி கணனி முன் வாழ்க்கை நடத்துகிறார்கள் . இப்படி நம் அன்றாட வாழ்வில் செல்போன், கணனி போன்றவை இன்றியமையாததாக மாறிப்போனது .இவைகளைத் தவிர்க்கவும் இயலாது .செல்போன் ,கணனி,தொலைக்காட்சி போன்றவற்றில் இருந்து வரும் அதிகப்படியான வெளிச்சத்தால் கண் பார்வைத் திறன் பாதிக்கப்படுகிறது . சில எளிய செயல்பாடுகளின் மூலம் செல்போன், கணனி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் இருந்து வரும் அதிகப்படியான வெளிச்சத்தில் இருந்து நம் கண்களை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் .குறிப்பாக செல்போன், கணனி, தொலைக்காட்சி போன்றவற்றை நீண்ட நேரம் பார்க்கும் பொது அவைகளின் “திரை வெளிச்சத்தின் (screen brightness)” அளவைக் குறைத்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லது .தற்போது அனைத்து நவீன திரைகளிலும் “நைட் மோட் (night mode)” வசதி வந்துவிட்டது. இரவு நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணனி போன்றவற்றை பயன்படுத்துவோர் இந்த நைட் மோட் வசதியை ஆன் செய்து விட்டு பயன்படுத்துவதால் கண் பார்வைத் திறன் பாதிப்பிலிருந்து சற்று தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார்கள் வல்லுநர்கள் .மேலும் தெளிவான கண் பார்வைக்கு, கண்ணிற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது .

8 summer foods for healthy eyes | Vision Direct UK

வெயிற்காலங்களில் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், இளநீர் போன்றவற்றை பகல்நேரத்தில் சாப்பிடுவது நல்லது. வெயிற்காலங்களில் தலைப் பகுதியில் ஏற்படும் அதிகமான சூட்டினால் கண்கள் பாதிக்கப்படுகிறது . தலையை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதின் மூலமாக கண்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம் . நீண்ட நேரம் செல்போன் கணனி போன்றவற்றைப் பயன்படுத்தும் பொது சிறிது இடைவெளி விட்டு வேறு காட்சிகளை பார்ப்பதின் மூலமாக கணங்களின் பார்வைத் திறன் பெரிதாக பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளலாம் .காலை எழுந்தவுடன் தினமும் ஒரு பத்து நிமிடங்கள் கண்களை மேலும் கீழுமாக, வலதும் இடதுமாக அசைத்து பயிற்சி அளிப்பதன் மூலமாக கண்களுக்கு செல்லும் நரம்புகள் வலுப்பெறுவதுடன் கண் பார்வையும் தெளிவாகிறது மற்றும் கண்களும் பலப்படுகின்றன .
தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்