பேட்டை காவல் ஆய்வாளருக்கு முகநூல் நண்பர்கள் குழு பாராட்டு

0
160

மோசமான சாலையை சீரமைக்க நேரில் களமிறங்கிய பேட்டை காவல் ஆய்வாளருக்கு முகநூல் நண்பர்கள் குழுவினர் நேரில் நன்றி தெரிவித்தனர்.

நெல்லை பேட்டை ரயில்வே கேட் பகுதியிலிருந்து பேட்டை மில்கேட், சாஸ்திரி நகர், சுத்தமல்லி விலக்கு வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக படு மோசமாக போக்குவரத்துக்கு பிரயோஜனமற்ற நிலையில் காணப்பட்டு வந்தது. இந்த மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் தவறிக் கீழே விழுந்து கடும் அவதி அடைந்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசமான இந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு நெல்லை பேட்டை காவல் ஆய்வாளர் ஹரிஹரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் நேரடியாக களமிறங்கி ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து குண்டும் குழியுமான சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

காவல்துறை அதிகாரி குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க களமிறங்கிய வீடியோ மற்றும் படங்கள் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் காவல் ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் தலைமையில் முகநூல் நண்பர்கள் குழு மூத்த ஆலோசகர் முருகப்பன் மற்றும் முகநூல் நண்பர்கள் சுத்தமல்லி கணேசன், மேலப்பாளையம் அஜித், பேட்டை செல்வகணேஷ் உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வாளர் ஹரிஹரன் அவர்களுக்கு சந்தனமாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக சாலையை சீரமைக்க உதவியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்