திருப்பதி தரிசன அனுமதிச்சீட்டை மாற்றிக்கொள்ளும் வசதி

0
139

திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசன டோக்கனை மாற்றிக் கொள்ள வசதி
திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசன டோக்கனை மாற்றிக் கொள்ள வசதி
நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை டிக்கெட் பெற்றுக்கொண்டு திருப்பதிக்கு வர முடியாத பக்தர்கள் தரிசன டோக்கன்களை தேதி மாற்றம் செய்துகொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வைபை சுப்பா ரெட்டி , மழை வெள்ளம் மற்றும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட காரணமாக நவம்பர் 18ஆம் தேதி முதல் டிசம்பர் 10-ஆம் தேதி வரை தரிசன டோக்கன்கள் இருந்தும் திருப்பதிக்கு வரஇயலாத பக்தர்கள் அந்த டோக்கன்கள் மூலம் மூன்று மாத காலத்துக்குள் தரிசனம் செய்து கொள்ளலாம் என்றார்.

இலவச தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசனம் டோக்கன்கள் மாற்றிக்கொள்ள தேவஸ்தான இணையதளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்