சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த போலி சாமியார்

0
388

திண்டிவனம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த போலி சாமியார் உட்பட 3 பேரை 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 13ம் தேதி வீட்டில் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது கீழ் ஆதனூர் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றி உள்ளார். அப்போது சிறுமி திண்டிவனம் செல்வதாக கூறி உள்ளார். திண்டிவனத்தில் விடுகிறேன் என ஆட்டோ ஓட்டுனர் சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மதுராந்தகம் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனிடையே சிறுமியை காணவில்லை என திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். சிறுமியின் செல்போனில் ஐஎம்இ எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் வேறு ஒரு நபர் பேசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த எண்ணை ஆய்வு செய்து செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தில் சிறுமி உட்பட மூன்று பேர் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதில் ஒருவர் போலி சாமியாராவார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்