களக்காடு மலையடிவாரத்தில் புலிகள் அட்டகாசம் விவசாயிகள் அச்சம்.

0
196

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள கீழவடகரை கிராமத்தில் மலையடிவாரத்தில் நேற்று மாலை நேரத்தில் விவசாயிகள் வழக்கம்போல் தங்களது விவசாயப்பணிகளை முடித்துவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மலையடிவாரத்தில் இரண்டு புலிகள் சுற்றுவதை பார்த்த விவசாயிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர் அதோடு ஊருக்குள் சென்று புலி வந்தத்தகவலை கூறினர்.

இதனையடுத்து ஊரிலுள்ள அனைவரும் மலை அடிவாரத்தை நோக்கி சென்றனர் மேலும் இரண்டு புலிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் புலிகள் மீண்டும் ஊருக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்