மண்ணுக்குள் புதைந்த இரண்டு தொழிலாளர்களை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர் !

0
150

நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது வீட்டிற்கு அஸ்திவாரம் தோண்டும் பணிகளுக்காக கட்டடத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி இருந்தார். இதற்காக சுமார் 10 அடி ஆழம் வரை குழி தோண்டப்பட்டது. எதிர்பாராத விதமாக திடீரென அக்குழியில் மண் சரிந்து விழுந்ததில் முதலைப்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளரான சின்னுச்சாமி மற்றும் தாதம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகிய இருவரும் மண்ணுக்குள் புதையுண்டர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு மண்ணை வேகமாக அகற்றி தொழிலாளர்கள் இருவரும் சுவாசிக்க வழி செய்ததோடு, சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் இருவரையும் உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தீயணைப்புத் துறையினர் இந்த துரிதமான செயலுக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்