சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 5 பேர் கைது ; 5 ரேஸ் பைக்குகள் பறிமுதல்

0
136

சென்னையில் பைக்ரேஸ் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 5 பேரை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் கடந்த 19ஆம் தேதி காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே பைக் ரேசில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 6 பேரை சிறையில் அடைத்தனர். 2 பேர் சிறுவர்கள் என்பதால் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அவர்களை தங்க வைத்தனர். மேலும் காவல் ஆணையாளர் பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று அவர் கூறியதை அடுத்து இரவு பணியில் ஈடுபடக் கூடிய ரோந்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபொழுது பாரிமுனை பகுதியில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர்b அங்கு எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலின் செய்துகொண்டு இளைஞர்கள் ரேசில் ஈடுபட்டதை காவல்துறையினர் கண்டறிந்து 5 பேரை கைது செய்தனர்.

கைது செய்து விசாரித்த போது முதற்கட்ட விசாரணையில் ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் என்பவரின் மகனும் தனியார் கல்லூரி மாணவர் பிபின் குமார் என தெரியவந்தது. மீதி நான்கு பேரும் வெவ்வேறு கல்லூரி சார்ந்த கல்லூரி மாணவர்கள் என வெளிவந்தது.

கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்