சீனாவில் விமான விபத்து..!

0
148

133 பயணிகளுடன் சென்ற சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. போயிங் 737 ரக விமானம் ஒன்று மலைப் பகுதியின் மேல் செல்லும்போது விபத்துக்குள்ளானது. தெற்கு சீனாவில் உள்ள மலைப்பகுதியில் கீழே விழுந்து விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும் காட்சி வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

விமானத்தில் இருந்த பயணிகள் குறித்தும் உயிரிழப்புகள் குறித்தும் சீன அரசால் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்