‘இந்தியாவில் விமான எரிபொருளின் விலை கடும் உயர்வு’ – விமான கட்டணங்கள் விலையும் உயரும் அபாயம் !

0
132

இந்தியாவில் விமான எரிபொருளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது விமான பெட்ரோலின் விலை “ஒரு கிலோ லிட்டருக்கு 17,135 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1,10,666 ரூபாயாக நிர்ணயிக்கப்படுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யா உக்ரைன் போரின் பொருளாதாரத் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்ததன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் விமான எரிபொருளின் விலையும் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

India extends ban on international flights till April 30 | TTG Asia

“இந்தியாவில் விமான எரிபொருளின் விலை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்தது இதுவே முதல்முறையாகும்”.நடப்பாண்டில் மட்டும் விமான எரிபொருள் 50% க்கும் மேல் விலை உயர்ந்துள்ளது. இதனால் விமானக் கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. விமானத்தை இயக்குவதற்கான செலவில் எரிபொருளின் பங்கு மட்டும் 40 சதவீதமாக உள்ளது. விமான எரிபொருளின் விலை உயர்த்தப்பட்ட போதும் சாதாரண பெட்ரோல் டீசலின் விலை தொடர்ந்து 132 வது நாளாக மாறாமல் சமநிலையில் இருந்து வருகிறது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்