இரண்டாவது முறையாக உ. பி முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் யோகி ஆதித்யநாத்

0
256

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப்பைத் தவிர்த்து மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், உத்திரப்பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 274 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் உ. பி யில் நேற்று நடந்த பாஜக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அரசு அமைப்பதற்கு ஆளுநரிடம் யோகி ஆதித்யநாத் உரிமை கோரினார். ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து இன்று உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகப் பதவியேற்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதனால் உ. பி தலைநகர் லக்னோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவப் படையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்